எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வுக்காககாத்திருக்கும் 4300 போலீசார்
எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வுக்காககாத்திருக்கும் 4300 போலீசார்
ADDED : மே 24, 2025 03:06 AM
ராமநாதபுரம்,:தமிழகத்தில் எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வுக்காக 2002 ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த 4300 போலீசார் காத்திருக்கின்றனர்.
போலீசாராக பணிபுரிபவர்கள் 23 ஆண்டுகள் பணி செய்திருந்தால் எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தொடரில் காவல் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி 23 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தால் எஸ்.எஸ்.ஐ., யாக பதவி உயர்வு வழங்கும் திட்டத்தில் ஒரு இரண்டாம் நிலை போலீஸ்காரர் 10 ஆண்டுகள் பணி நிறைவில் முதல்நிலை போலீஸ்காரராகவும், அதன் பின் தற்போதுள்ள 5 ஆண்டுகள் என்பதை 3 ஆண்டுகளில் ஏட்டாக பதவி உயர்த்தப்படுவார்கள். பத்து ஆண்டுகள் ஏட்டாக பணிபுரிந்த பிறகு எஸ்.எஸ்.ஐ., யாக பதவி உயர்வு பெறுவார்கள் என அறிவித்தார். 25 ஆண்டுகளில் பதவி உயர்வு என்பது 23 ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்கப்படும் என்பது போலீசாரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பின் படி 2002 ல் போலீஸ் பணி நியமனம் பெற்றவர்கள் எஸ்.எஸ்.ஐ., யாக பதவி உயர்வு பெறுவார்கள். இதற்கான அரசாணை வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என 2002 ல் பணியில் சேர்ந்த 4300 போலீசார் எதிர்பார்க்கின்றனர்.