ADDED : அக் 25, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு, 45 கிலோ சந்தன கட்டைகளை, தமிழக அரசு சார்பில், முதல்வர் இலவசமாக வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கஸ்துாரி சந்தனக்கூடு திருவிழா, விரைவில் நடக்கவுள்ளது. இந்த திருவிழாவிற்காக, தமிழக அரசு வாயிலாக, 45 கிலோ சந்தன கட்டைகள் இலவசமாக வழங்குவதற்கான அரசாணையை, சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
நாகூர் தர்கா அறங்காவலர் செய்யது முகமது காஜி ஹூசைன் சாஹிப், பரம்பரை அறங்காவலர் காஜி செய்யது முகமது கலிபா சாஹிப் காதிரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அப்போது, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், தலைமை செயலர் முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

