ADDED : ஜூலை 17, 2025 12:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:பெண் போலீஸ் வீட்டின் பீரோவை உடைத்து, 45 சவரன் நகைகள் திருடப்பட்டன.
திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு பெண் போலீஸ் தங்கமாரி, 45, என்பவரது வீடும் உள்ளது. இவரது கணவர் ராஜ்குமார் வணிகம் செய்கிறார்.
தங்கமாரி மாநகர போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக உள்ளார். நேற்று மாலை அவர் பணி முடிந்து வந்த போது, வீட்டின் கதவு திறந்திருந்தது. பீரோ உடைக்கப்பட்டு 45 சவரன் நகைகள் திருடு போயிருந்தன.
பணிக்கு செல்லும்போது, அவர் வழக்கமாக வைக்கும் இடத்தில் இருந்து சாவியை எடுத்து, மர்ம நபர்கள் இத்திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. போலீசார் விசாரிக்கின்றனர்.