உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 13, 2026 12:06 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில், 46 டி.எஸ்.பி.,க்களை பணியிட மாற்றம் செய்து, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டு உள்ளார்.
திருநெல்வேலி பாளையங் கோட்டை உதவி கமிஷனராக இருந்த சரோஜா, திருநெல்வேலி நகர மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல், ஆவடி ஆவண காப்பக உதவி கமிஷனராக இருந்த முத்துராஜா, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,யாக மாற்றப்பட்டுள்ளார்.
இதுபோல், மாநிலம் முழுதும், 46 டி.எஸ்.பி., அந்தஸ்து அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர்.
