ADDED : ஆக 31, 2025 06:38 AM
சென்னை: நடப்பு சீசனில், இதுவரை இல்லாத அளவாக, 5.13 லட்சம் விவசாயிகளிடம் இருந்து, 47.97 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. கடந்த 2024 செப்., 1ல் துவங்கிய நடப்பு நெல் கொள்முதல் சீசன், இன்றுடன் முடிவடைகிறது.
நேற்று வரை, 47.97 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 5.13 லட்சம் விவசாயிகளுக்கு, மத்திய, மாநில அரசுகளின் சார்பில் குறைந்தபட்ச ஆதார விலையாக, 11,660 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன், 2020 - 21 சீசனில், 44.90 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருந்ததே, உச்ச அளவாக இருந்தது.
நாளை முதல் புதிய குறைந்தபட்ச ஆதார விலையில், அடுத்த சீசனுக்கான நெல் கொள்முதல் துவங்க உள்ளது.

