ADDED : ஜன 21, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேட்டில் ஈடுபட்ட, 4,975 பேர், கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே தெரிவித்து உள்ளது.
ரயில்வே அறிக்கை:
போலி டிக்கெட் முகவர்கள் மற்றும் கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வோர் மீது, ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே வணிக பிரிவு மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி., இணைந்து நடவடிக்கை எடுக்கின்றன.
'டிஜிட்டல்' கருவிகளை பயன்படுத்தி, 'இ - டிக்கெட்' முறைகேடு, டிக்கெட் கவுன்டர்களில் முறைகேடு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.