ADDED : பிப் 01, 2026 02:02 AM

சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, ஐந்து விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அறிக்கை:
நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி., விரைவு ரயில், பிப்., 5, 8, 12, 19, 22, 26ம் தேதிகளில் மாற்றுப்பாதையில் விருதுநகர், காரைக்குடி, திருச்சி வழியாக செல்வதால், மதுரை, திண்டுக்கல் செல்லாது
கன்னியாகுமரி - மேற்கு வங்க மாநிலம் ஹவுரா விரைவு ரயில், பிப்., 7, 14, 21, 28ம் தேதிகளில், மாற்றுப்பாதையில் செல்வதால், மதுரை, கொடைக்கானல், திண்டுக்கல் செல்லாது
கேரளா மாநிலம் குருவாயூர் - எழும்பூர் விரைவு ரயில், பிப்., 4, 5, 6, 7, 8, 11, 12, 13, 14 15, 18, 19, 20, 21, 22, 25, 26, 27, 28ம் தேதிகளில், மாற்றுப்பாதையில் செல்வதால், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் செல்லாது
கன்னியாகுமரி - தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் விரைவு ரயில், பிப்., 6, 13, 20, 27ம் தேதிகளில் மாற்றுப்பாதையில் செல்வதால், மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது
நாகர்கோவில் - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா விரைவு ரயில், வரும் 21ம் தேதி மாற்றுப்பாதையில் செல்வதால், மதுரை, திண்டுக்கல் செல்லாது. மானாமதுரையில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

