உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : டிச 16, 2025 05:26 AM

அ நிறம் | அளவு
சென்னை: சைபர் குற்றத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை, குண்டர் சட்டத்தில் தமிழக சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக சைபர் கிரைம் போலீஸ் அறிக்கை: தமிழகத்தில் சைபர் குற்றத்தில் ஈடுபட்டு வந்த ராஜஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு என ஏமாற்றிய வழக்கில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐந்து பேரையும் தற்போது, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளோம்.
இந்தாண்டில் இதுவரை, 48 சைபர் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 13 பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். இதேபோல், கடந்தாண்டில், 35 சைபர் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
