ADDED : டிச 17, 2024 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வேளாண் துறை செயலர் அபூர்வா உள்ளிட்ட ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, தலைமை செயலர் அந்தஸ்து அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அமுதா, குறு, சிறு தொழில்கள் துறை செயலர் அதுல் ஆனந்த், அயல் பணி அடிப்படையில், மத்திய அரசின் புதுப்பிக்கதக்க எரிசக்தி துறை செயலராக உள்ள சுதீப் ஜெயின், வீட்டு வசதித்துறை செயலர் காகர்லா உஷா, வேளாண் துறை செயலர் அபூர்வா ஆகியோர், 1994ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தவர்கள்.
இவர்கள் ஏற்கனவே, கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்தில் பணிபுரிந்து வருகின்றனர். தலைமை செயலர் அந்தஸ்துக்கான பதவி உயர்வு நேற்று வழங்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை, தலைமை செயலர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.
இவர்களில் சிலர் விரைவில் பணி ஓய்வு பெறவுள்ளனர்.