தமிழகத்தில் 5 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!
தமிழகத்தில் 5 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!
ADDED : டிச 16, 2024 04:10 PM

சென்னை: தமிழகத்தில் அமுதா ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட 5 மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தலைமைச் செயலாளர் நிலை அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, அபூர்வா ஆகியோர், தலைமை செயலாளர் நிலை அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள், தாங்கள் பணியாற்றும் துறையில் கூடுதல் தலைமை செயலாளர்களாக பணியாற்றுவர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அதுல் ஆனந்த், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறையின் கூடுதல் தலைமை செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
சுதீப் ஜெயின் ஐ.ஏ.எஸ்., புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையின் கூடுதல் தலைமை செயலாளராகவும், காகர்லா உஷா, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறக் கழகம் கூடுதல் தலைமை செயலாளராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அபூர்வா ஐ.ஏ.எஸ்., வேளாண் உற்பத்தி ஆணையராகவும், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தலைமை செயலாளர் என்ற ஒரு பதவி மட்டுமே உள்ளது. தற்போதைய அறிவிப்பில் இடம்பெற்றுள்ள அமுதா ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏற்கனவே கூடுதல் தலைமை செயலாளர்களாக உள்ளனர். 1994ம் ஆண்டு பேட்ச்சான இவர்கள் தற்போது தலைமை செயலாளர்களாக தகுதி உயர்த்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ள இந்த பதவி உயர்வு என்பது தற்காலிகமானது என்பது குறிப்பிடத்தக்கது