தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ரயிலில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 06:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: ரயிலில் கேட்பாரற்று கிடந்த, 5 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சேலம் வழியாக செல்லும் ரயில்களில், கஞ்சா கடத்துவதை தடுக்க ஆர்.பி.எப்., மற்றும் தமிழ்நாடு ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று புதுடில்லி – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில், தனிப்படை போலீசார் ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் வரை சோதனை செய்தனர். அப்போது, பின்பக்க பொதுப்பெட்டியில், கழிப்பறை அருகே கேட்பாரற்று இருந்த பையை திறந்து சோதனை செய்தனர்.

அதில், 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. இதையடுத்து பறிமுதல் செய்த கஞ்சாவை, சேலம் ரயில்வே போலீசாரிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் திலகவதி விசாரணை நடத்தி வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us