உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 15, 2026 07:17 PM
அ நிறம் | அளவு
ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே, எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட, 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை வழியாக மகாராஷ்டிரா மாநிலம் தன்பாத்தில் இருந்து ஜோலார்பேட்டை மார்க்கமாக, கேரள மாநிலம் ஆழலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (நவ.,14) நள்ளிரவு சென்று சென்று கொண்டிருந்தது.
ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் வந்தபோது, சேலம் கோட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர். பொது ஜன பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர்.
அதில், 5 கிலோ கஞ்சா இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்து, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
