ADDED : ஜூலை 18, 2025 02:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்த நிலையில் பக்தர்கள் காணிக்கையாக ரூ. 2 கோடியே 81 லட்சத்து 16 ஆயிரத்து 256, வெளிநாட்டு கரன்சி 1324 மற்றும் 5. 05 கிலோ தங்கம், 11.438 கிலோ வெள்ளி கிடைத்தது.
உண்டியல் எண்ணிக்கையில் ஒரே மாதத்தில் 5 கிலோ தங்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு கிலோ தங்க கட்டிகள் 2, நுாறு கிராம் தங்க கட்டிகள் 23 என 4 கிலோ 300 கிராம் எடையில் 24 கேரட் கட்டிகள் கிடைத்துள்ளன. மேலும் தங்க நாணயங்கள், தாலிகள், வேல், செயின் ஆகியவையும் கிடைத்துள்ளன. உண்டியல் எண்ணும் பணியில் கல்லுாரி மாணவர்கள், அலுவலர்கள் ஈடுபட்டனர்.