ADDED : ஆக 18, 2025 04:01 AM
நாங்கள், பா.ஜ., கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வெளியேறியது அவரது முடிவு. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு கூறிய பின்பும், தமிழக அரசு தயக்கம் காட்டு கிறது. அதற்கான காரணம் பற்றி, முதல்வர்தான் கூற வேண்டும். தமிழகம் முழுதும் 5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. இதை ஆக்கிரமித்தவர்களை அகற்றாமல், தி.மு.க., அரசு தொடர்ந்து மவுனம் காக்கிறது. ஏனென்றால், தி.மு.க.,வே 'முரசொலி' அலுவலகத்துக்காக பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக புகார் உள்ளது.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்றும் ஆணை கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. இதற்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட யார் ஆதரவு கொடுத்தாலும் நன்றி. புதிய கட்சி துவங்கியுள்ள விஜய், இன்னும் முழு அளவில் அரசியல் களத்துக்கே வரவில்லை.
- -ஜான்பாண்டியன் தலைவர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்