திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றிய 5 பேர் கைது
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றிய 5 பேர் கைது
ADDED : நவ 19, 2024 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக ஹிந்து அமைப்பினர் கோரிக்கை வைத்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் சிலர் தீபத்துாணில் தீபம் ஏற்றினர். இதுகுறித்து, சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்யதது. தீபம் ஏற்றியவர்கள் குறித்து போலீசார் விசாரித்தனர்.
ஹிந்து முன்னணியை சேர்ந்த அரசுப் பாண்டி, செல்வகுமார், சண்முகவேல், பிரசாந்த், சூர்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.