உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 03, 2026 06:35 AM

அ நிறம் | அளவு
திண்டிவனம்: புதுச்சேரி மாநில அமைப்பாளர் உள்ளிட்ட ஐந்து பேர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால், நேற்று முதல் செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலர் ஜனார்த்தனன், கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலர் பப்லு, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலர் ஜெகன், ஒருங்கிணைந்த வேலுார் மாவட்ட அமைப்பு செயலர் - கிருஷ்ணன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி ஆகிய ஐந்து பேர் நீக்கப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
