sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை - பனாரஸ் உட்பட 5 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

/

சென்னை - பனாரஸ் உட்பட 5 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை - பனாரஸ் உட்பட 5 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை - பனாரஸ் உட்பட 5 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு


UPDATED : பிப் 01, 2025 03:23 AM

ADDED : ஜன 31, 2025 10:26 PM

Google News

UPDATED : பிப் 01, 2025 03:23 AM ADDED : ஜன 31, 2025 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: காசி தமிழ் சங்கமம் நிகழ்வையொட்டி, சென்னை சென்ட்ரல் - பனாரஸ் உட்பட ஐந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:


சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும் 13ம் தேதி மதியம் 2:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் காலை 7:15 மணிக்கு, உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ் செல்லும். பனாரசில் இருந்து, 19ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11:45க்கு சென்ட்ரல் வரும்

கன்னியாகுமரியில் இருந்து, வரும் 13ம் தேதி இரவு 11:00க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நான்காவது நாளில் அதிகாலை 7:15 மணிக்கு பனாரசில் செல்லும். பனராஸில் இருந்து, 20ம் தேதி அதிகாலை 4:20க்கு புறப்பட்டு, அடுத்த மூன்றாவது நாள் மதியம் 3:00 மணிக்கு கன்னியாகுமரி செல்லும்

கோவையில் இருந்து, வரும் 16ம் தேதி காலை 6:35க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் காலை 7:15 மணிக்கு பனாரஸ் செல்லும். பனாரசில் இருந்து, 22ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு புறப்பட்டு, அடுத்த மூன்றாவது நாள் காலை 9:30 மணிக்கு கோவை வரும்

கன்னியாகுமரியில் இருந்து, வரும் 17ம் தேதி இரவு 11:30க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த 4வது நாளில் காலை 7:15 மணிக்கு பனாரஸ் செல்லும். பனாரசில் இருந்து, 23ம் தேதி இரவு 7:05 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நான்காவது நாளில் அதிகாலை 2:45 மணிக்கு கன்னியாகுமரி செல்லும்

சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும் 19ம் தேதி மதியம் 2:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் காலை 11:45 மணிக்கு பனாரஸ் செல்லும். பனாரசில் இருந்து, 24ம் தேதி இரவு 6:05 மணிக்கு புறப்பட்டு, அடுத்த மூன்றாவது நாளில் காலை 9:30 மணிக்கு சென்ட்ரல் வரும். டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us