ADDED : ஜன 15, 2026 02:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பயணியர் முன்பதிவு குறைவாக இருந்ததால், ஐந்து சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே அறிக்கை:
பொங்கலுக்கு அறிவிக்கப்பட்ட சில ரயில்களுக்கு முன்பதிவு குறைவாக இருந்தது.
அதன் அடிப்படையில், தாம்பரம் - கன்னியாகுமரி, வரும் 19ம் தேதி மாலை 3:30 மணி; தாம்பரம் - நாகர்கோவில், வரும் 21ம் தேதி பகல் 12:30 மணி; சென்னை சென்ட்ரல் - கோவை வரும் 19ம் தேதி இரவு 11:25.
கோவை போத்தனுார் - சென்ட்ரல் 21ம் தேதி நள்ளிரவு 12:35; சென்ட்ரல் - போத்தனுார் மதியம் 1:50 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

