ADDED : பிப் 03, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:மானுார் அருகே பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., அருணாசலம் 57, கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் மானுார் அருகே சுண்டங்குறிச்சி வி.ஏ.ஓ., அருணாச்சலம். தண்ணீர் பன்னீரூத்து கிராமத்தைச் சேர்ந்த சண்முகையா 62 ,என்பவர் தனது நிலத்தை மனைவி பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். அந்தப் பணியை முடிக்க வி.ஏ.ஓ., ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
நேற்று வி.ஏ.ஓ. அலுவலகத்தில் வைத்து சண்முகையாவிடம் ரூ .5 ஆயிரம் வாங்கிக் கொண்டு பெயர் மாற்றப்பட்ட பட்டாவை அருணாச்சலம் கொடுத்தார். அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வி.ஏ.ஓ.,வை கைது செய்து சிறையிலடைத்தனர். சுத்தமல்லியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

