ADDED : நவ 11, 2025 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் புதிதாக 50 நிரந்தர ஆதார் சேவை மையங்கள் நேற்று துவக்கப்பட்டன.
இதன் வாயிலாக, ஆதார் சேவை மையங்களின் எண்ணிக்கை, 266ல் இருந்து 316ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஆதார் நிறுவனத்திடம் இருந்து, 300 கூடுதல் பதிவு உபகரணங்கள் பெற்று, பள்ளிக் கல்வித் துறையிடம் ஒப்படைக்க, 'எல்காட்' நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மாணவ - மாணவியருக்காக, சென்னை, திருச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உட்பட, 16 மாவட்டங்களில், 79 சிறப்பு முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

