ADDED : பிப் 20, 2025 01:13 AM
சென்னை:ஜோய் ஆலுக்காஸ், ஆபரணங்களின் செய்கூலி, சேதாரத்தில், 50 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகை, தங்கம், வைரம், வெட்டப்படாத வைரம், 'பிரஷியஸ்' ஜுவல்லரி, பிளாட்டினம், வெள்ளி ஆபரணங்கள் என, அனைத்திற்கும் பொருந்தும்.
பாரம்பரிய இந்திய ஆபரணங்கள், புத்தம் புதிய ஆபரணங்கள், இத்தாலியன், துருக்கி, 'எத்னிக்' வகை என்று, பலவிதமான ஆபரணங்களை, உலகின் பல நாடுகளில் இருந்து ஜோய்ஆலுக்காஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
இதுகுறித்து, ஜோய்ஆலுக்காஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் ஜோய் ஆலுக்காஸ் கூறியதாவது:
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தன்னிகரில்லாத, 'ஜுவல்லரி ஷாப்பிங்' அனுபவத்தை உறுதிப்படுத்துவதே ஜோய் ஆலுக்காஸின் முதல் நோக்கம். வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்திட, மிகச்சிறந்த மற்றும் விரிவான தேர்வுகளை உடைய ஜுவல்லரி கலெக் ஷனை வாடிக்கையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
இந்த விசேஷ விழாக்கால சலுகை வாடிக்கையாளர்களுக்கு, 50 சதவீத தள்ளுபடியை, அவர்கள் வாங்கும் ஆபரணங்களின் செய்கூலி அல்லது சேதாரத்தில் வழங்கும். இந்த சலுகை, எங்களின் அனைத்து ஷோரூம்களிலும் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஆபரணங்களை, மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜோய்ஆலுக்காசின் மிகப்பெரிய ஜுவல்லரி விற்பனை, மார்ச், 9ம் தேதி வரை, அதன் அனைத்து ஷோரூம்களிலும் நடக்கிறது. மேலும், வாடிக்கையாளர்கள் ஆயுட்கால இலவச பராமரிப்பு, ஓராண்டு இலவச இன்சூரன்ஸ், 'பை பேக்' உத்தரவாதம் உள்ளிட்ட கூடுதல் சலுகைகளை பெறலாம்.

