sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விஜய் கட்சியில் காங்கிரசுக்கு 50 'சீட்?' பா.ஜ., வளர்ச்சியை தடுக்க ராகுல் வியூகம்

/

விஜய் கட்சியில் காங்கிரசுக்கு 50 'சீட்?' பா.ஜ., வளர்ச்சியை தடுக்க ராகுல் வியூகம்

விஜய் கட்சியில் காங்கிரசுக்கு 50 'சீட்?' பா.ஜ., வளர்ச்சியை தடுக்க ராகுல் வியூகம்

விஜய் கட்சியில் காங்கிரசுக்கு 50 'சீட்?' பா.ஜ., வளர்ச்சியை தடுக்க ராகுல் வியூகம்

31


UPDATED : டிச 29, 2025 08:31 AM

ADDED : டிச 29, 2025 01:57 AM

Google News

31

UPDATED : டிச 29, 2025 08:31 AM ADDED : டிச 29, 2025 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'காங்கிரசை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள த.வெ.க., காங்கிரசுக்கு 50 தொகுதிகள் தர முன் வந்துள்ளது' என தகவல் வெளியாகி உள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம், வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி என கூறி வரும் விஜய், தி.மு.க.,வின் நீண்ட கால கூட்டணி கட்சியான காங்கிரசை இழுக்க முயற்சித்து வருகிறார்.

ஆறுதல்

கரூரில் த.வெ.க., கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தபோது, விஜய்க்கு தொலைபேசியில் காங்., மூத்த தலைவர் ராகுல் ஆறுதல் தெரிவித்தார். விஜயை காங்கிரஸ் தலைமை விரும்பினாலும், 22 ஆண்டுகளாக நீடிக்கும் தி.மு.க., உடனான கூட்டணியை, சட்டென முறித்துக்கொள்ள விரும்பவில்லை.

மேலும், லோக்சபா, ராஜ்யசபாவில் தி.மு.க.,வின் எம்.பி.,க்கள் பலம், பா.ஜ., அரசை எதிர்கொள்ள அவசியம் என காங்கிரஸ் தலைமை நினைக்கிறது. ஆனாலும், ராகுலுக்கு நெருக்கமான காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் உள்ளிட்டோரும், தமிழக காங்கிரஸ் தலைவர்களில் பலரும், த.வெ.க., கூட்டணியை விரும்புவதாக கூறப்படுகிறது.

காங்., மேலிட தலைவர்களின் ஆசியுடன், கட்சியின் தகவல் பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, கடந்த 5ம் தேதி விஜயை சென்னையில் சந்தித்தார். இது, தி.மு.க.,வை அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்நிலையில், த.வெ.க., கூட்டணியில் காங்கிரசுக்கு 50 தொகுதிகளை கொடுக்க தயாராக இருப்பதாக, விஜய் தரப்பில் இருந்து ராகுலுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.



இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தின் பெரிய கட்சியாக இருந்த அ.தி.மு.க., நிலைமை இப்போது மோசமாக உள்ளது.

சந்தேகம்

சட்டசபை தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், அக்கட்சி நிலைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை பயன்படுத்தி, அ.தி.மு.க., இடத்திற்கு வர பா.ஜ., திட்டமிடுகிறது. இதை தடுத்து, அ.தி.மு.க., இடத்திற்கு த.வெ.க., வர வேண்டும். அப்போது தான், தமிழகத்தில் பா.ஜ., எழுச்சியை தடுக்க முடியும் என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் போன்றோர் நினைக்கின்றனர்.

வரும் தேர்தலில், த.வெ.க., 20 சதவீத ஓட்டுகளை பெற்றாலே, அ.தி.மு.க., இடத்தை பிடித்து விடும் என்பது காங்., மேலிடத்தின் கணிப்பாக உள்ளது. இதன் காரணமாகவே, விஜயை சமீபத்தில் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தார். லோக்சபா தேர்தல் தான் காங்கிரசுக்கு முக்கியம். சட்டசபை தேர்தலில் வென்றாலும், தி.மு.க., ஆட்சியில் பங்கு தரப் போவதில்லை.

தமிழக சட்டசபை தேர்தலுடன், மேற்கு வங்க சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளது. அங்கு, பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் வருகின்றன. இது நடந்து, தமிழகத்திலும் குறிப்பிடத்தக்க இடங்களை பா.ஜ., பிடித்தால், தேசிய அளவில் காங்கிரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.

எனவே, அ.தி.மு.க., இடத்திற்கு பா.ஜ., வராமல் தடுக்க, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம் என, காங்கிரசில் உள்ள பலர் சோனியா, ராகுலிடம் கூறி வருகின்றனர். இதை அவர்களும் மறுக்கவில்லை; தி.மு.க., கூட்டணியை முறிக்கவும் தயங்குகின்றனர்.

கடந்த 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 41 தொகுதிகள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளது. இதற்கு தி.மு.க., உடன்படாவிட்டால், கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க.,வை மீண்டும் சீண்டிய பிரவீன் சக்கரவர்த்தி


காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, நேற்று தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2010ல் உ.பி.,யின் மொத்த கடன், தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது உ.பி.,யை விஞ்சி விட்டது தமிழகம். 'வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதில் பஞ்சாப், ஹரியானாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை அபாயத்துக்குரியதாக உள்ளது' என கூறியுள்ளார். அவர் தி.மு.க., அரசை நேரடியாகவே குறை கூறியிருப்பது, தி.மு.க.,வில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



ஆர்.எஸ்.எஸ்., அடிவருடி: தி.மு.க., கடும் விமர்சனம்


'காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, ஆர்.எஸ்.எஸ்., அடிவருடி' என, தி.மு.க., செய்தி தொடர்பாளர் சரவணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது பதிவில், 'உ.பி.,யை விட தமிழகத்தின் கடன் சுமை அதிகம் என, பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அறிஞர் போல கருத்து சொல்லி விட்டார். இப்படிபட்ட அறிவார்ந்த கருத்துகளை, 200 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ள மத்திய பா.ஜ., அரசுக்கு வழங்கி இருக்கிறாரா இந்த வல்லுனர். 'இந்தியாவின் நிலை கவலைக்கிடம் என்று ஏதாவது முத்துகளை உதிர்த்திருக்கிறாரா? ஆர்.எஸ்.எஸ்., அடிவருடிகள், பா .ஜ.,வில் மட்டும் தானா இருக்கின்றனர்?' என குறிப்பிட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us