தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இன்று 5,000 மருந்தகங்கள் செயல்படும்: அமைச்சர் அருண்ராஜ்

 இன்று 5,000 மருந்தகங்கள் செயல்படும்: அமைச்சர் அருண்ராஜ்

 இன்று 5,000 மருந்தகங்கள் செயல்படும்: அமைச்சர் அருண்ராஜ்


ADDED : மே 20, 2026 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 12:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ''தமிழகத்தில், 5,000 மருந்தகங்கள் செயல்படுவதுடன், அவசர தேவைக்கான மருந்துகளையும் மக்கள் எளிதில் பெற முடியும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

நாடு முழுதும், 'ஆன்லைன்' மருந்து விற்பனையை தடுக்கவும், வலி நிவாரணி, துாக்க மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடுக்கவும் வலியுறுத்தி, மருந்து வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அளித்த பேட்டி:

மருந்து வணிகர்கள், மத்திய அரசுக்கு எதிராக தான், போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆன்லைன் மருந்து விற்பனை தடை தொடர்பாக, மத்திய அரசை மாநில அரசும் வலியுறுத்தும்.

மாநிலம் முழுதும், 50,000 மருந்தகங்கள் மூடப்பட்டாலும், அரசின் நடவடிக்கையால், 5,000 மருந்தகங்கள் இன்று செயல்படும். மேலும், அவசர தேவைக்கு மருந்து தேவைப்பட்டால், அதற்கு உதவும் வகையில் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

போராட்டத்தில் ஈடுபடும் மருந்து வணிகர்களும், அவசர தேவைக்கு உதவ தயராக உள்ளனர். இதனால், பொது மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட மாட்டார்கள்.

மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு, கிராமப்புற மக்களுக்கு எதிரானது. அத்தேர்வு வேண்டாம் என்பதில், நாங்களும் உறுதியாக உள்ளோம். இதுதொடர்பாக, மத்திய அரசை வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us