தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு


UPDATED : நவ 04, 2026 01:59 PM

ADDED : நவ 04, 2026 01:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 01:59 PM ADDED : நவ 04, 2026 01:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: உளுந்துார்பேட்டை அருகே 5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த சீதேவி கிராமத்தில், விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் விஜயரங்கம், தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் எறையூரை சேர்ந்த குழந்தைராஜ் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள குன்றுப்பகுதி பாறையில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான செங்காவி நிற ஓவியங்கள் கண்டறியப்பட்டது.

இது குறித்து ஆய்வாளர்கள் விஜயரங்கம், இம்மானுவேல் கூறியதாவது:

இங்குள்ள ஒரு பாறை மையப்பகுதியில் பெரிய அளவிலான மான் உருவம், நீண்ட கிளைகளுடன் கூடிய கொம்புகளுடன் செங்காவி வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. இந்த மானின் எதிர்ப்புறம் மனிதனின் உருவம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. தன் ஒரு காலினை தரையில் ஊன்றியும், மற்றொரு காலை துாக்கியும் கையில் ஆயுதத்தை ஏந்தியவாறு காட்டப்பட்டுள்ளது.

இக்காட்சியானது தொல்மாந்தர்களின் வேட்டை காட்சியை நினைவு கூறுகிறது. இந்த மனித உருவத்தின் வெளிப்புற கோடுகள் அடர் சிவப்பு நிறத்தை கொண்டு வரையப்பட்டுள்ளது.

அதன் உட்புறம் வெளிர் சிவப்பு நிறத்தை கொண்டு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. மேலும், கொம்புகள் உடைய மானின் மேல் வலப்புறத்தில் சிறிய அளவிலான மானின் உருவம் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் நேர்த்தியான முறையில் வரையப்பட்டுள்ளதால் வரைவதில் கைத்தேர்ந்தவரால் மட்டுமே வரையப்பட்டிருக்க வேண்டும். இந்த ஓவியங்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம்.

மேலும், இம்மலையை சுற்றியுள்ள பகுதிகளில் பழங்கால பானை ஓடுகள் ஆங்காங்கே சிதறிக் காணப்படுகின்றன. இங்கே கிடைக்க கூடிய தொல்லியல் சான்றுகள் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனித நாகரிகம் சிறப்பாக இருந்துள்ளதை அறியமுடிகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us