50வது திருமண நாள்: தலைவர்களுக்கு முதல்வர் விருந்து
50வது திருமண நாள்: தலைவர்களுக்கு முதல்வர் விருந்து
ADDED : ஆக 20, 2025 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஆகியோர், இன்று தங்களது 50வது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
இதையொட்டி, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களுக்கு, முதல்வரின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில், நேற்றிரவு சிறப்பு விருந்து அளிக்கப் பட்டது.
இதில், வி.சி., தலைவர் திருமாவளவன், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, ம.நீ.ம., தலைவர் கமல், இந்திய கம்யூ., மாநில பொதுச் செயலர் முத்தரசன், மார்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, முதல்வரின் மனைவி துர்கா, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர். துணை ஜனாதிபதி தேர்தல் குறித்தும், கூட்டணியை பலப் படுத்துவது குறித்தும், இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.