ADDED : செப் 27, 2025 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த, 2023ல், 520 டி.எம்.சி., மழைநீர் வீணாக சென்று கடலில் கலந்தது. இந்த ஆண்டும் அதேபோல் பல நுாறு டி.எம்.சி., தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கும் சூழல்தான் உள்ளது. காரணம், தமிழகத்தில் மழைநீரை சேமிக்க உரிய கட்டமைப்பு இல்லை.
தமிழக பட்ஜெட்டில், நீர்ப்பாசன திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்தால் தான், விவசாயிகள் விவசாயம் செய்ய முடியும். தமிழகத்தில், 63 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கின்றனர். அவர்களுக்கு என்ன தேவை என்பது கூட, தி.மு.க., அரசுக்கு தெரியவில்லை. ஆட்சி அதிகாரத்துக்கு பா.ம.க., வரும்போது, கண்டிப்பாக, விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும்.
- அன்புமணி
தலைவர், பா.ம.க.,