ADDED : ஜன 18, 2025 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், 58 வேட்பாளர்கள், 65 மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த, 10ம் தேதி தொடங்கிய மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த, 10ல் மூன்று பேர், 13ம் தேதி ஆறு பேர் சுயேட்சையாக ஏழு மனு தாக்கல் செய்தனர்.
இறுதி நாளான நேற்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வரிசையில் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியும்மனுதாக்கல் செய்தார்.
மொத்தத்தில், 58 ேபர், மனு தாக்கல் செய்துள்ளனர்.