ADDED : அக் 15, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த இந்திலி கிராமத்தில் விபசாரம் நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மாலை இந்திலி பகுதியில் வயல்வெளியில் அமைந்துள்ள வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு, விளாந்தங்கல் சாலை பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி நித்யா, 29; என்பவர் வெளி மாவட்ட பெண்களை வரவழைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
அதையடுத்து, நித்யா, அங்கிருந்த புது உச்சிமேடு ராஜேஷ்குமார், 32; இந்திலி செல்வம், 37; சிறுவங்கூர் அஜித், 25; கோட்டைமேடு ஆகாஷ், 25; சின்னசேலம் கார்த்திக், 26; உள்ளிட்ட 6 பேரைப் பிடித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்து, ஆட்டோ மற்றும் 2 பைக்குகளைபறிமுதல் செய்தனர்.