சென்னையில் மழையால் 6 விமானங்கள் ரத்து; 2 சுரங்க பாதைகள் மூடல்
சென்னையில் மழையால் 6 விமானங்கள் ரத்து; 2 சுரங்க பாதைகள் மூடல்
ADDED : டிச 12, 2024 12:48 PM

சென்னை: கனமழை காரணமாக சென்னையில் 6 ஏர் இந்தியா விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மெல்ல நகர்ந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடியக்கரையில் 18 செ.மீ, தலைஞாயிறு 14 செ.மீ, வேளாங்கண்ணியில் 13 செ.மீ, மதுராந்தகம், சென்னை கொளத்தூரில் 11 செ.மீ மழை பொழிவு பதிவாகி உள்ளது. சென்னையில் விடிய விடிய தொடரும் மழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னையில் இருந்து புறப்படும் 3 விமானங்கள், சென்னைக்கு வரும் 3 விமானங்கள் என மொத்தம் 6 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், பழவந்தாங்கல் சுரங்கப்பாதை மற்றும் அரங்கநாதன் சுரங்கப்பாதை மழை காரணமாக தற்போது மூடப்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து போலீசார் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

