தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கேஸ் சிலிண்டர்களை திருடிய 6 பேர் கைது

கேஸ் சிலிண்டர்களை திருடிய 6 பேர் கைது

கேஸ் சிலிண்டர்களை திருடிய 6 பேர் கைது


UPDATED : அக் 18, 2026 05:29 PM

ADDED : அக் 18, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 05:29 PM ADDED : அக் 18, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர், மருத்துவக்கல்லுாரி போலீசார், கடந்த அக்., 16ம் தேதி, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக கேஸ் சிலிண்டருடன் வந்த பாத்திமா நகரைச் சேர்ந்த அந்தோணி பவியன், 24, பாரதி தெருவைச் சேர்ந்த கார்த்திக், 26, இருவரையும் போலீசார் விசாரித்தனர்.

போலீசாரிடம் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அத்துடன், வள்ளலார் நகரைச் சேர்ந்த புகழேந்திரன், 73, என்பவர் வீட்டு திண்ணையில் வைக்கப்பட்டிருந்த, காலி கேஸ் சிலிண்டரை திருடியதை தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பாபநாசம் அருகே இரும்புத்தலையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், சோழன் தெருவைச் சேர்ந்த சூர்யா, விளாரைச் சேர்ந்த செல்வராஜ், வல்லம் புதுாரைச் சேர்ந்த முருகானந்தம் ஆகியோரிடம், கேஸ் சிலிண்டர்களை திருடி கொடுப்பதாகவும், அவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நேற்றுமுன்தினம் இரவு, தமிழ்செல்வன், 30 சூர்யா, 25, செல்வராஜ், 35, முருகானந்தம், 27, கார்த்திக், அந்தோணி பவியன் ஆகிய ஆறு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து இருந்த, 17 காலி கேஸ் சிலிண்டர் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us