உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 18, 2026 05:29 PM
ADDED : அக் 18, 2026 05:24 PM
அ நிறம் | அளவு
திருச்சி: ரயில் பயணியரை, அரிவளால் வெட்டிய தங்கக்குமார், 27, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 45, அவரது நண்பர் மகாதேவனுடன், அக்., 12ல் திருப்பூரில் இருந்து, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில், திருச்சி வந்தார். கோட்டை ரயில் நிலையத்தில், அவர்கள் இருவரும் இறங்கியபோது, மூன்று பேர் கொண்ட கும்பல், அவர்களை அரிவாளால் வெட்டி தப்பியது.
ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், வழக்கு பதிந்து, நேற்று, திருச்சி, வாமடத்தைச் சேர்ந்த தங்ககுமாரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
