தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சென்னை - கோவை உட்பட 6 ரயில்களின் சேவை ரத்து

 சென்னை - கோவை உட்பட 6 ரயில்களின் சேவை ரத்து

 சென்னை - கோவை உட்பட 6 ரயில்களின் சேவை ரத்து


ADDED : மார் 21, 2026 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 06:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : தானியங்கி சிக்னலில் இறுதி கட்ட சோதனைகள் நடப்பதால், சென்னை - கோவை உட்பட, ஆறு ரயில்களின் சேவை, வரும் 24ல் ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள அறிக்கை: ஜோலார்பேட்டை அருகில் தானியங்கி சிக்னலில், வரும் 24ல் இறுதிகட்ட சோதனைகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ரத்து அரக்கோணம் - சேலம், காலை 5:15 மணி ரயில்; சேலம் - அரக்கோணம் மாலை 3:30 மணி ரயில்

கோவை - சென்னை சென்ட்ரல், காலை 6:20 மணி ரயில்; சென்ட்ரல் - கோவை மதியம் 2:30 மணி ரயில்

ஈரோடு - ஜோலார்பேட்டை, காலை 6:00 மணி ரயில்; ஜோலார்பேட்டை - ஈரோடு மதியம் 2:45 மணி ரயில்

மாற்றுப்பாதையில் இயக்கம் கோவை - கர்நாடகா மாநிலம், கே.எஸ்.ஆர்., பெங்களூரு உதய் விரைவு ரயில், சேலம், தர்மபுரி, ஓசூர் மாற்று வழியாக இயக்கப்படுகிறது. இதனால், திருப்பத்துார், கிருஷ்ணராஜபுரம் செல்லாது

நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி., விரைவு ரயில்; திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மாற்றுப் பாதை வழியாக இயக்கப்படுகிறது. இதனால், கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்துார், ஜோலார்பேட்டை செல்லாது

தாமதம் சென்ட்ரல் - கோவை, மதியம் 2:15 மணி, 'வந்தே பாரத்' ரயில், இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்படும்

கோவை - சென்ட்ரல், மாலை 3:15 மணி ரயில், இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us