sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.6.64 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் முதலீட்டாளர் மாநாடு நிறைவில் முதல்வர் அறிவிப்பு

/

ரூ.6.64 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் முதலீட்டாளர் மாநாடு நிறைவில் முதல்வர் அறிவிப்பு

ரூ.6.64 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் முதலீட்டாளர் மாநாடு நிறைவில் முதல்வர் அறிவிப்பு

ரூ.6.64 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் முதலீட்டாளர் மாநாடு நிறைவில் முதல்வர் அறிவிப்பு


ADDED : ஜன 09, 2024 12:21 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இதுவரை இல்லாத அளவாக, 6 லட்சத்து 64,180 கோடி ரூபாய் முதலீடுகள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் வாயிலாக, 26 லட்சத்து 90,657 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மாநாடு நிறைவு விழாவில், முதல்வர் பேசியதாவது:

இந்த மாநாடு, தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமையும். மாநாட்டின் தனித்துவமும், புதுமைத்துவமும் என்றும் பேசப்படும். மாநாட்டில் இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடு, 6 லட்சத்து 64,180 கோடி ரூபாய். இந்த திட்டங்கள் தொடர்ச்சி 3ம் பக்கம்

வழியாக, நேரடி வேலை வாய்ப்பு என்ற வகையில், 14.55 லட்சம்; மறைமுக வேலை வாய்ப்பு என்ற வகையில், 12.36 லட்சம் என, மொத்தம், 26.91 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.

மொத்த முதலீடுகளில், உற்பத்தி துறையில், அதாவது தொழில் துறை சார்பாக, 3 லட்சத்து 79,809 கோடி ரூபாய்; எரிசக்தி துறை, 1 லட்சத்து 35,157 கோடி; வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, 62,939 கோடி; தகவல் தொழில்நுட்பத் துறை, 22,130 கோடி; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 63,573 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த முதலீடுகள் மாநிலம் முழுதும் மேற்கொள்ளப்பட உள்ளன. வரும், 2030ம் ஆண்டுக்குள், 83 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் பெற்ற மாநிலமாக மாற்ற, பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து செயல்படுகிறோம். இந்த இலக்கை விரைவில் அடைய, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் துணை நிற்கும்.

எங்கள் அரசு மீதும், எங்கள் கொள்கைகள் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவது, எங்கள் தலையாய கடமை. எங்கள் அரசை பொறுத்தவரை, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதில் இருந்து, உங்கள் செயல்கள் அனைத்துக்கும், தொழிற்சாலை கட்டி உற்பத்தியை துவக்குவது வரை உறுதுணையாக இருப்போம். தேவையான அனைத்து அனுமதிகளும், ஒற்றைசாளர முறையில் வழங்கப்படும்.

அதேபோல, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த, அமைச்சர் ராஜா தலைமையில், சிறப்பு குழு அமைக்கப்படும். ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தொடர்ந்து கண்காணித்து, முழு தொழிற்சாலையாக மாற்ற, எல்லா முயற்சிகளையும் எடுப்பர். என்னிடம் தகவல் தெரிவிக்க, என் அலுவலகத்தை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

ராஜாவுக்கு பாராட்டு!

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''இந்த மாநாட்டை உலகமே வியக்கும் வகையில் நடத்தி, இந்தியாவே வியக்கும் வகையில் முதலீட்டை ஈர்த்து, என் இதயத்தில் நீங்கா இடம் பெற்று விட்டார் ராஜா. தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்ற குறுகிய காலத்தில், இமாலய சாதனை செய்துள்ளதை பாராட்டுகிறேன். மாநாட்டில் கண்ணும் கருத்துமாக இருந்த, தலைமைச் செயலர் மற்றும் அரசு அதிகாரிகளை பாராட்டுகிறேன்,'' என்றார்.



துறை வாரியாக முதலீடுகள் விபரம் (ரூபாய் கோடியில் )

-----------------உற்பத்தி துறை - ௩,௭௯,௮௦௯ எரிசக்தி துறை - ௧,௩௫,௧௫௭ வீட்டு வசதி துறை - ௬௨,௯௩௯ தகவல் தொழில்நுட்பம் - ௨௨,௧௩௦சிறு, குறு தொழில்கள் - ௬௩, ௫௭௩ பிற துறைகள் - ௫௭௨



துறை வாரியாக முதலீடுகள் விபரம் (ரூபாய் கோடியில் )

-----------------உற்பத்தி துறை - ௩,௭௯,௮௦௯ எரிசக்தி துறை - ௧,௩௫,௧௫௭ வீட்டு வசதி துறை - ௬௨,௯௩௯ தகவல் தொழில்நுட்பம் - ௨௨,௧௩௦சிறு, குறு தொழில்கள் - ௬௩, ௫௭௩ பிற துறைகள் - ௫௭௨








      Dinamalar
      Follow us