UPDATED : நவ 07, 2026 07:51 PM
ADDED : நவ 07, 2026 07:46 PM

–நிருபர் குழு–: ‘நீலகிரி மாவட்டத்தில் உள்ள நுாலகங்களுக்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டியில் உள்ள மாவட்ட நுாலகத்தில், 669 ‘அகல் விளக்கு’ பதிப்பகத்தின் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பில் மற்றும் பிற விபரங்கள் வராததால் புத்தகங்கள் அனைத்தும் பிற நுாலகங்களுக்கு அனுப்பப்படாமல் வைக்கப்பட்டுள்ளது.
அதில், மகாகவி பாரதியார் மற்றும் பல புத்தங்கள் இடம் பெற்றுள்ளன. நீலகிரியிலும் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் நுாலக அலுவலர் கிளமென்ட் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில், முழு நேர நுாலகம், 5; கிளை நுாலகம், 49; ஊர் பொது நுாலகம், 29; பகுதி நேர நுாலகம், 22 என, மொத்தம் 105 நுாலகங்கள் செயல்படுகிறது. 2026--–--27ம் ஆண்டுக்காக, கடந்த ஆட்சியின் போது, ‘59 டைட்டில்’களில், 669 புத்தகங்கள் வந்துள்ளன.
‘‘ஆனால், புத்தகத்தின், எண், பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பகம், பதிப்பாண்டு, விலை மற்றும் தேதி கொண்ட ஆணை விவரங்கள் குறித்து, பொது நுாலக இயக்ககத்தில் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை. இதனால் அனைத்தும் பிரிக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளன. எந்த நுாலகத்துக்கும் அனுப்படவில்லை,’’ என்றார்.
