ADDED : ஜூன் 20, 2026 04:18 AM
சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று, பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:
கடந்த 3 முதல் 16ம் தேதி வரை, போதை பொருட்கள் தொடர்பாக, 473 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 672 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10.56 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு எரிக்கப் பட்டுள்ளன.
குடி போதையில் வாகனம் ஓட்டிய, 16,031 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பெண் சிறப்பு படையில், முதல் கட்டமாக, 70 அலகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. உதவி ஆய்வாளர், காவலர்கள் என, கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படை சார்பில், 1315 கல்வி நிறுவனங்கள், 1,415 பொது இடங்களில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
சிங்கப் பெண் சிறப்பு படை வாயிலாக, இது வரை 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காணாமல் போன ஒரு பெண்ணையும், குழந்தைகளையும் மீட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமான சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
