உள்ளடக்கத்திற்கு செல்ல
செல்வப்பெருந்தகை மகள் திருமண விழா ஸ்டாலின் பங்கேற்பு
செல்வப்பெருந்தகை மகள் திருமண விழா ஸ்டாலின் பங்கேற்பு
ADDED : ஜூன் 20, 2026 04:18 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மகள் திருமண விழாவில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். காங்கிரஸ் தலைவர் கார்கே, பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் வரவில்லை.
செல்வப்பெருந்தகை மகள் அக் ஷா பிரியா, ஆர்ஜன் ராயர் திருமணம், சென்னையில் நடந்தது.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பிறந்த நாள் காரணமாக, கார்கே, கே.சி.வேணுகோபால், கிரீஷ் ஷோடங்கர் போன்ற மேலிட தலைவர்கள் டில்லியில் தங்கி விட்டனர்.
அதனால், செல்வப்பெருந்தகையை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
