ADDED : மே 28, 2026 01:52 AM
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூகநீதி, சமத்துவம், பின்தங்கிய மக்களின் உரிமை. இதை பலவீனப்படுத்தவோ, நீதிமன்ற வழிகளில் பாதிக்கவோ அனுமதிக்க கூடாது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினர் மொத்த மக்கள் தொகை, 90 சதவீதம் வரை இருப்பதாக ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
அதன் அடிப்படையில், அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கவே 69 சதவீத இடஒதுக்கீடு, சட்ட ரீதியாக அமலானது. முதல்வர் விஜய் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில், சட்ட தரவுகளை சமர்ப்பிக்க எடுத்த முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. தமிழக உரிமையான 69 சதவீத இடஒதுக்கீட்டை, எந்தவிதத்திலும் பறிக்க முயற்சிகள் நடக்காதவாறு உறுதியான நிலைப்பாட்டை அரசு எடுக்க வேண்டும்.
- ராமதாஸ் நிறுவனர், பா.ம.க.,
