ADDED : அக் 31, 2025 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற ஐந்து பேருக்கு, புதிய பணியிடங்கள் ஒதுக்கியும், மேலும் இருவரை இடமாற்றம் செய்தும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்கு, அவர்களின் பணி மற்றும் செயல்திறன் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
அதன்படி, கவிதா, முத்துகுமரன், லீலா அலெக்ஸ், வீரப்பன், ரேவதி ஆகியோருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, அவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்குரிய பதவியை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

