தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த 7 பேர் கைது

போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த 7 பேர் கைது

போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த 7 பேர் கைது


UPDATED : அக் 15, 2026 06:27 PM

ADDED : அக் 15, 2026 06:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 06:27 PM ADDED : அக் 15, 2026 06:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: ராசிபுரம் பகுதியில், அரசு தொடர்பான போலி ஆவணங்கள் தயாரித்து, மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கடந்த, 2 நாட்களில் மட்டும், 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், அரசு அலுவலகங்களின் பெயரில், போலி ஆவணங்கள் தயார் செய்து, முறைகேடு நடப்பதாக தொடர்ந்து புகார் வந்தன. குறிப்பாக, நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலாவில் இயங்கி வந்த கம்ப்யூட்டர் சென்டரில், போலி வாரிசு சான்றிதழ் தயாரித்து வங்கியில் சமர்ப்பிக்கப்பட்டது. அங்கு ஆவணத்தை ஆய்வு செய்தபோது, அது போலி என கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தாசில்தார் அளித்த புகார் அடிப்படையில், ஆயில்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதேபோல், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து பெயரில், போலி வீட்டு வரி ரசீது தயாரித்து, தற்காலிக மின் இணைப்பை நிரந்தர வீட்டு மின் இணைப்பாக மாற்றியுள்ளனர். இதுகுறித்து டவுன் பஞ்., செயல் அலுவலர் அளித்த புகார்படி, போலி ரசீதை பயன்படுத்திய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனரின் கையெழுத்து மற்றும் முத்திரையை போலியாக தயாரித்து, கட்டட பணி முடிப்பு சான்றிதழ் பெற்று, புதிய வணிக வளாகத்திற்கு முறைகேடாக மின் இணைப்பு பெறப்பட்டதும் தெரிந்தது. இது தொடர்பாக பத்து ரூபாய் இயக்கம் சார்பில், ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மூன்று மோசடி புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டார். இதையடுத்து ராசிபுரம், ஆயில்பட்டி போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

இதில், ஆயில்பட்டியில் போலி வாரிசு சான்றிதழ் தயாரித்து கொடுத்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர், சான்றிதழ் கேட்ட பெண் மற்றும் புரோக்கர் இருவர் என, 4 பேரை ஆயில்பட்டி போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், ராசிபுரத்தில் நகராட்சி அதிகாரிகளின் முத்திரையை போலியாக தயாரித்து, வணிக வளாகத்திற்கு மின் இணைப்பு பெற உதவிய நகராட்சி முன்னாள் ஊழியர் உள்பட, மூவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் ராசிபுரம் தாலுகா பகுதியில், அரசு போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் கடந்த, 2 நாட்களில் மட்டும், 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., பெயரில், போலி வரி ரசீது தயாரித்து மின் இணைப்பு மாற்றம் செய்த வழக்கில் மட்டும், இன்னும் கைது செய்யாமல் உள்ளனர்.

இது குறித்து நாமகிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சாந்தி கூறுகையில், ''சம்பந்தபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவர்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us