தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 7 வகையான பரிசோதனைக்கு பரிந்துரை

 காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 7 வகையான பரிசோதனைக்கு பரிந்துரை

 காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 7 வகையான பரிசோதனைக்கு பரிந்துரை


ADDED : மார் 18, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 06:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தொடர் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால், ஏழு வகையான பரிசோதனை செய்ய, பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், பருவநிலை மாற்றம் காரணமாக, நோய் பரவல் அதிகரித்து வருகிறது. காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலியுடன் கூடிய பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

சிலருக்கு சளி, இருமல் குணமடைந்த பின் தலைவலி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. காய்ச்சலும் விட்டு விட்டு வருவதுடன், தொடர் பாதிப்பும் இருக்கிறது.

தமிழகத்தில் அதிகளவில், 'இன்ப்ளுயன்ஸா வைரஸ்' ஆர்.எஸ்.வி., எனப்படும் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் 'அடினோ வைரஸ்' தொற்றுகளால், இந்த பாதிப்புகள் அதிகமாக பரவி வருகின்றன.

தற்போது, கொரோனா பலவீனப்பட்ட பருவ கால நோயாக இருந்தாலும், அதில் உருமாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதற்கான பரிசோதனை, அவ்வப்போது நடந்து வருகிறது.

மேலும், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, காகங்கள் உயிரிழந்து வருகின்றன. எனவே, காய்ச்சலால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கும், பறவை காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை, மனிதர்களுக்கு பாதிப்பு கண்டறியப்படவில்லை.

தொடர்ச்சியாக காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஏழு வகையான பரிசோதனை செய்ய பரிந்துரை செய்துள்ளோம்.

கொரோனா, பறவைக் காய்ச்சல், டெங்கு, டைப்பாய்டு, மலேரியா உள்ளிட்ட ஏழு வகையான பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய் பாதிப்புகள், சமூகத்தில் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us