அரசு மருத்துவமனைகளில் 700 பார்மசிஸ்ட் பணியிடம் காலி அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதி
அரசு மருத்துவமனைகளில் 700 பார்மசிஸ்ட் பணியிடம் காலி அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதி
ADDED : ஜூலை 26, 2025 06:31 PM
கோவை:தமிழக சுகாதார துறையில், 700 பார்மசிஸ்ட் பணியிடங்கள் ஆண்டுக்கணக்கில் காலியாக உள்ளதால், அரசு மருத்துவமனை களுக்கு வரும் நோயாளி கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரியுடன் இணைந்த அரசு மருத்துவமனைகள் 62, அரசு பல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இரண்டு, மாவட்ட தலைமை மருத்துவமனைகள் 18, வட்டம் மற்றும் வட்டம் சாராத பிற அரசு மருத்துவமனைகள் 272, ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1,800 உள்ளிட்ட மருத்துவனைகளில், 4,500 பார்மசிஸ்ட் பணியிடங்கள் உள்ளன.
இங்கு ஓய்வு பெறும் பார்மசிஸ்ட் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப் படவில்லை. தற்போதைய நிலவரப்படி, 700 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், மருந்துகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால், நோயாளிகள் அவதிக்கு உ ள்ளாகின்றனர்.
அரசு மருத்துவமனை அனைத்து பார்மசிஸ்ட் சங்க மாநில பொதுச்செயலர் சண்முகம் கூறுகையில், ''காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப் படாததால், போதுமான பார்மசிஸ்ட்கள் இன்றி, மருந்து வினியோக பணிகளில் சிரமம் ஏற்படுகிறது.
''மேலும், பல இடங்களில் மருந்து சேமிப்பு கிடங்குகள் தகர கொட்டகைகளில் தான் செயல்படுகின்றன. சில மருந்துகளை, 25 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்க வேண்டும்.
''குளிர்பதன வசதி தமிழக அரசு மருத்துவ மனைகளில் இல்லை. இச்சிக்கலில் அரசு நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.