தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ த.வெ.க.,விற்கு மாறும் 700 இளைஞர் ஓட்டுகள்

 த.வெ.க.,விற்கு மாறும் 700 இளைஞர் ஓட்டுகள்

 த.வெ.க.,விற்கு மாறும் 700 இளைஞர் ஓட்டுகள்


ADDED : ஏப் 16, 2026 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 06:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதியில் ஜம்புதுறைகோட்டை ஊராட்சியைச் சேர்ந்த காமலாபுரம் என்ற குக்கிராமத்தில், 2,800 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு, 31 வயதிற்கு கீழ் உள்ள 'ஜென்சி கிட்ஸ்' எனப்படும் இளம் தலைமுறை இளைஞர்களின் 511 ஓட்டுகள் உள்ளன. இவர்கள் வெவ்வேறு இடங்களில் பணியாற்றி வந்தாலும், தங்கள் கிராமத்திற்கான அடிப்படை வசதிகள் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அழகம்பட்டியில் இருந்து 2 கி.மீ., துாரம் உள்ள ஜம்புதுறைகோட்டை வரை, கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும்; கிரிக்கெட் விளையாட மைதானம் அமைக்க வேண்டும்; ஜல்லிபட்டி செல்லும் வழியில் உள்ள கல்குவாரியை மூட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இவற்றை நிறைவேற்றுவதாக கூறி, கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் தேன்மொழி போட்டியிட்டு வென்றார். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் தங்கள் கிராமத்திற்கு எதுவும் செய்யவில்லை என கிராமத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதனால் இம்முறை, ஜென்சி கிட்ஸ் ஓட்டுகள் 511 உடன், புதிய வாக்காளர்கள் 200 பேர் என, மொத்தம் 711 பேர் இணைந்து, த.வெ.க.,விற்கு ஓட்டு போட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us