உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 15, 2026 06:48 AM

அ நிறம் | அளவு
சென்னை : ரயில்வேயில், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
அதன்படி, தெற்கு ரயில்வேயில், 50க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்ட, 200க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள், கடந்த ஆண்டில் திறக்கப்பட்டன.
இதற்கிடையே, நாடு முழுதும் தயாராக உள்ள 75 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி வரும் 17ம் தேதி, வீடியோ கான்பரன்ஸ் வழியே திறந்து வைக்க உள்ளார்.
இதில், தமிழகத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள, சின்னசேலம், சென்னை பூங்கா, குன்னுார் ஆகிய ரயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன.
