தமிழக கடலோர பகுதிகளில் 7,500 போலீசார் தீவிர பாதுகாப்பு
தமிழக கடலோர பகுதிகளில் 7,500 போலீசார் தீவிர பாதுகாப்பு
ADDED : ஜன 19, 2024 11:34 PM
சென்னை:தமிழகத்தில் பிரதமர் மோடி இருப்பதால், சென்னை முதல் ராமேஸ்வரம் வரை, கடலோர பகுதிகளில், 7,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக இரண்டு நாட்கள் தமிழகம் வந்துள்ளார். அவரது வருகையை ஒட்டி, மாநிலம் முழுதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சென்னை திருவொற்றியூர் முதல் ராமேஸ்வரம் வரை, 1,076 கி.மீ., நீள கடலோர பகுதிகளில், 7,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் கூறுகையில், 'பிரதமர் வருகையை ஒட்டி, இரண்டு முறை கடலோர பகுதிகளின் பாதுகாப்பு குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது.
'அதன் அடிப்படையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளி நபர்கள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்படுகிறது. அதிநவீன படகில் ரோந்து பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது'என்றனர்.