ADDED : மே 15, 2025 02:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்து விபரம் அடங்கிய, மூன்றாவது புத்தகத்தை, அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.
இதுவரை மீட்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு, 7,560 ஏக்கர்; மதிப்பு, 7,871 கோடி ரூபாய். 648 கோவில்களின், 5,400 ஏக்கர் நிலம், பட்டா மாற்றம் செய்ததை மீண்டும் கோவில் பெயருக்கே மாற்றம் செய்துள்ளோம். நான்கு ஆண்டுகளில், 1,046 கோடி ரூபாய் நிலுவை வாடகை வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பாளர் மீது யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என, சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு சேகர்பாபு கூறினார். அறநிலைய துறை செயலர் மணிவாசகன், கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் பழனி பங்கேற்றனர்.