ADDED : ஆக 07, 2025 12:52 AM
சென்னை:பயங்கரவாதிகள் எட்டு பேரின், தற்போதைய தோற்றப் புகைப்படங்கள் இல்லாததால், துப்பு துலக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
கோவை தொடர் குண்டு வெடிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில், 30 ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டு வந்த, பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி, டெய்லர் ராஜா ஆகியோர், கடந்த மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் கூட்டாளிகளான, கோவை போத்தனுாரை சேர்ந்த முஜிபுர் ரகுமான், வாணியம்பாடியை சேர்ந்த முஸ்டாக் அகமது, கோவை குனியமுத்துாரை சேர்ந்த அஷ்ரப் அலி, இப்ராகிம், செல்வபுரத்தை சேர்ந்த அயூப்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குஞ்சு முகமது என்ற கனி, கோழிக்கோட்டை சேர்ந்த நாகு என்ற ரஷீத், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த ரசூல் மைதீன் ஆகிய எட்டு பேர் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர்.
அவர்களின் தற்போதைய தோற்றப் புகைப்படங்கள் இல்லாததால், அவர்களை தேடும் பணியில், போலீசார் திணறி வருகின்றனர். ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன், அவர்களின் படங்களை வரைய திட்டமிட்டுள்ளனர்.