தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வுக்கு 8 ஆண்டுகளாக நீடிக்கும் போராட்டம்

 ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வுக்கு 8 ஆண்டுகளாக நீடிக்கும் போராட்டம்

 ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வுக்கு 8 ஆண்டுகளாக நீடிக்கும் போராட்டம்

1


ADDED : செப் 13, 2026 12:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 12:04 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ஆட்டோ மீட்டர் கட்ட ணம் உயர்வு கேட்டு, எட்டு ஆண்டுகளாக, 50க்கும் மேற்பட்ட போராட்டங் கள் நடத்தப்பட்டு உள்ளன. ஆனால், போக்குவரத்து துறை மவுனம் காத்து வருவது, ஓட்டுநர்கள், பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஓடும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு, கடந்த 2013ம் ஆண்டு, 1.8 கி.மீ., துாரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது; 13 ஆண்டுகளுக்கு மேலாக அதே கட்டணமே உள்ளது.

கோரிக்கை மனு பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக, ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க கோரி, 2018ம் ஆண்டு முதல் தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.

இதை தொடர்ந்து, ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில், இதுவரை ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என, 50க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த காலகட்டத்தில் போக்குவரத்து ஆணையர்களாக இருந்த, 10க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்; ஆனாலும், இதற்கு தீர்வு கிடைக்கவில்லை.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பின், ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயம் குறித்து, சென்னையில் கடந்த ஜூலை 9ம் தேதி முத்தரப்பு பேச்சு நடந்தது.

அதன் அடிப்படையில், ஆட்டோ கட்டணம் தொடர்பான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது; ஆனால், வெளியிடப்படவில்லை.

இது, ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மற்றொரு புறம், பொது மக்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து அவதிப்படும் நிலையும் இருந்து வருகிறது.

இது குறித்து, உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்க செயல் தலைவர் ஜாஹிர் ஹுசைன் கூறியதாவது:

ஆட்டோ கட்டணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதுவரை, அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில், 50க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம்.

போராடுகிறோம் ஒவ்வொரு போராட்டத்தின் போது, அதிகாரிகள் அழைத்து பேசுகின்றனர். எட்டு ஆண்டுகளுக்கு மேலாக போராடுகிறோம். இதுவரை ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க, அரசு முன்வரவில்லை.

குறைந்தபட்ச ஆட்டோ கட்டணமாக, 70 ரூபாய், கூடுதல் கட்டணமாக, ஒரு கி.மீ., 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை நிர்ணயிக்க வேண்டும்.

உடனடியாக கட்டண உயர்வை அறிவிக்காவிட்டால், வரும் 21ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நுகர்வோர் அமைப்பு

கூறுவது என்ன?

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் பால் பர்ணபாஸ் கூறியதாவது: புதிய ஆட்டோ கட்டண நிர்ணயம் செய்யும்போது, குறைந்தபட்ச கட்டணமாக 50 ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கி.மீ., 25 ரூபாய் வரை வசூலிக்க வேண்டும். அனைத்து ஆட்டோக்களிலும், 'டிஜிட்டல் மீட்டர்' மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இதுவரை ஆட்டோ கட்டணத்தை இறுதி செய்யவில்லை. இதனால், ஓட்டுநர்கள் பேரம் பேசி கட்டணம் வசூலிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us