வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 39,821 பேர் விண்ணப்பம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 39,821 பேர் விண்ணப்பம்
ADDED : டிச 22, 2025 12:43 AM

சென்னை: தமிழகத்தில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில், 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை, தேர்தல் கமிஷன் துவக்கியது.
முதல் கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடந்த 19ம் தேதி வெளியிட்டார்.
அதன்படி, 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தற்போது, 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர், புதிதாக சேர்க்க விரும்புவோர், தங்கள் பெயர்களை சேர்க்க மனு அளிக்கலாம்.
அதேபோல, பெயர் நீக்க, முகவரி மாற்றவும் விண்ணப்பம் அளிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறும் பணி நடந்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களில், 39,821 பேர் பெயர் சேர்க்கவும், 413 பேர் பெயர் நீக்கவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

