ADDED : மார் 19, 2024 02:12 AM
சென்னை : தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் ஒன்பது லோக்சபா தொகுதிகளுக்கு, ஒரே நாளில், 85க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் வினியோகம் செய்யப்பட்டன.
தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் ஒன்பது தொகுதிகளில் போட்டியிடுகிறது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று முதல் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கு விருப்ப மனுக்கள், 500 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து வினியோகிக்கப்பட்டன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்களை, பொது தொகுதிக்கு 30,000; தனித்தொகுதிக்கு 15,000; பெண்களுக்கு 15,000 ரூபாய் கட்டணத்துடன் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், 10,000 ரூபாய் மற்றும் பெண்ணாக இருந்தால், 5,000 ரூபாய் கட்டணத்துடன் விருப்ப மனுவை சமர்ப்பிக்க வேண்டும்.
வரும் 21ம்தேதி நேர்காணல் நடக்கிறது. விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, 25க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் நேற்று வினியோகிக்கப்பட்டுள்ளன.

