ADDED : டிச 24, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார், ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து, சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடப்பாண்டில் இதுவரை அரிசி கடத்தியதாக, 361 வழக்குகள் பதிந்து, 378 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, 86,606 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, 105 டூ வீலர்கள், 34 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, கடத்தல் வாகன உரிமையாளர்களிடம், 51 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளனர். ஆறு பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.